Developed by - Tamilosai
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸாருக்கு எதிராக யாராலும் குற்றம்சுமத்த முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரால் முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டு விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 5 மேல் நீதிமன்றங்களில் 9 வழக்குகள் இடம்பெறுவதாகவும் 24 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்து சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இனிமேல் அவரின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.