தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஈயத் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

0 143

 வவுனியா, ஓமந்தைப் பகுதியில் அமைந்துள்ள ஈயத் தொழிற்சாலையில் ஈயம் உருக்கும் ஆலையில் காணப்பட்ட உருக்கு கல் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் (07 ) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுத் திட்டத்தை அண்மித்து காணப்படும் ஈயத் தொழிற்சாலையில் ஈயத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஆலையின் உள்ளே காணப்பட்ட உருக்கு கற்களை மாற்றீடு செய்வதற்காக மூவர் இணைந்து அவற்றை அகற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த ஆலையில் இருந்த உருக்கு கல் உடைந்து விழுந்தமையால் அங்கு பாதுகாப்பற்ற முறையில் கடமையில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரது தலையில் கல் விழுந்தமையாலேயே அவர் மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு உதயராஜ் (வயது- 38) என்பவரே மரணமடைந்தவராவார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.