தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இ.போ.ச ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

0 31

நேற்று(27) முதல் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் என்று கோரி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம்(28) போரட்டமானது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பணி பகிஸ்கரிப்பினால் பல நூற்றுக்கணக்கான பயணிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். வட பிராந்திய முகாமையாளர் பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு போக்குவரத்து சாலை ஊழியர்களுக்கு உரிய எரிபொருள் மிக விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(28) போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து பேருந்து போக்குவரத்தும் வழமை போல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.