Developed by - Tamilosai
இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.
அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ட்விட்டரில் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.