Developed by - Tamilosai
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்குமலை (வடக்கு மடக்கும்புர) பிரிவில் இளைஞர் ஒருவர் ,இன்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே சரவணன் என்ற 30 வயது இளைஞன் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் கழுத்து பகுதி கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளது. அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.