தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

0 232

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அல்லது இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களாக கருதப்படுகிறது.

மேலும்இ நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனையின்போது 30க்கும் குறைவான ஊவு பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

மேற்படி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரே ஒரு தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கும் தங்கள் பெற்றோருடன் நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 முதல் 14 நாட்கள் வரை மாறுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.