புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மேமன் சங்க பிரதிநிதிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் எப்பாகத்திலாவது ஹிஜ்ரி 1443 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் அதுபற்றி அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.