தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை வருகிறார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்

0 66

 அடிமைத்துவத்தின் சமகாலப் போக்குகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை பற்றிய அறிக்கையிடலுக்காக நவம்பர் மாத இறுதியில் நாட்டிற்கு அவர் வருகை தரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் குறித்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனிதக் கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மனிதக் கடத்தல் தொடர்பான வடக்கு அயர்லாந்து சட்டசபை குழு, போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு என்பனவற்றில் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.