தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை ரூபாய் குறித்து கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு நாணயசபையொன்றை உருவாக்குங்கள்-அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஆலோசனை

0 446

இலங்கை ரூபாய் குறித்து கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு நாணயசபையொன்றை உருவாக்குங்கள் என  அமெரிக்காவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஜோன்ஹொப்கின்ஸ் பல்கலைகழக பேராசிரியர் ஸ்டீவ் எச் ஹாங் என்பவரே இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

ரூபாய் குறித்து கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு நாணயசபையை உருவாக்க முயலவேண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு அதுவே ஒரே வழி என அவர்தெரிவித்துள்ளார்.

1884 முதல் 1950 வரை இலங்கையில் நாணயசபை போன்ற ஒன்று காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் வருடாந்தம் 49 வீதமாக அதிகரித்து செல்வதை நான் இன்று மதிப்பிட்டுள்ளேன் என அவர் தனதுடுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாணயநெருக்கடியும் எரிபொருள் விலை அதிகரிப்பும் இலங்கை ரூபாயை மூழ்கடிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதலாம் திகதிமுதல் டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி  -26 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அதிகளவான கொடுப்பனவு நிலுவை நெருக்கடி மற்றும் சமீபத்தைய எரிபொருள் விலை உயர்வுகள் இலங்கை ரூபாயை மூழ்கடித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு 1884 முதல் 1950 வரை இலங்கையில் காணப்பட்ட நாணயசபை போன்றதொன்றை உருவாக்கவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.