தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி – வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி

0 50

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 580 ஓட்டங்களை பெற்று, ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்படி, பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 358 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 98 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 62 ஓட்டங்கயைும், துமித் கருணாரத்ன 51 ஒட்டங்களையும் மற்றும் குசல் மெந்திஸ் 50 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டிம் சவுதி மற்றும் பிளைர் திக்னர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.