தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று

0 424

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் இஷான் கிஷான் 89 ஓட்டங்களையும் ஷ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.