Developed by - Tamilosai
அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது