தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை போத்தல் குடிநீர் சங்கம் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகளை அறிவித்துள்ளது

0 195

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கி அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்தநிலையிலேயே, புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

அதற்கமைய போத்தல் குடிநீர் 500 மில்லி லீற்றருக்கான விலை 50 ரூபாயாகவும் ஒரு லீற்றருக்கான விலை 70 ரூபாயாகவும் 1.5 லீற்றருக்கான விலை 90 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 5 லீற்றருக்கான விலை 200 ரூபாயாகவும் 7 லீற்றருக்கான விலை 240 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.