Developed by - Tamilosai
இலங்கைக்கு ஒக்டேன் 92 ரக பெற்றோலுக்கு பதிலாக, ஒக்டேன் 91 ரக பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த தெரிவிக்கின்றார்.
ஜப்பான் வாகனங்களுக்கு ஒக்டேன் 91 ரக பெற்றோல் பொருத்தமற்றது எனவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பதிலளித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோலையே இறக்குமதி செய்துள்ளதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒக்டேன் 91 ரக பெற்றோல் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு ஒக்டேன் 91 ரக பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டதை, இலங்கை தர நிர்ணய நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆனந்த பாலித்த, உதய கம்மன்பிலவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
ஒக்டேன் 91 ரக பெற்றோல் இந்திய தயாரிப்பிலான வாகனங்களுக்கு பொருத்தமானது என்ற போதிலும், ஜப்பான் வாகனங்களுக்கு அது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்