தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை தொடர்பில் வெளியான முக்கிய அறிக்கை

0 113

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் 7 பேர் கூட்டாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

பங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் – தடுத்து வைத்தல் தொடர்பிலுள்ள உத்தரவுகள் மற்றும் தான்தோன்றித் தனமான கைதிகளின் தடுப்பு தொடர்பில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஐ.நா-வின் விசேட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள பின்புலத்தில் இந்த ஒன்றிணைந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.