Developed by - Tamilosai
ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற போதிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்தி சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை, ரஷ்யாவிற்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதாக தேயிலை சபை தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மாற்று வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்