Developed by - Tamilosai
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் இன்று நடப்பு டி-20 உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது.
அதன்படி தொடரின் முதல் போட்டியானது இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி 1.40 மணிக்கு சிட்டினியில் ஆரம்பமாகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்துக்கு பிறகு இரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக இந்த ஆட்டம் அமையும்.
உலகக் கிண்ண போட்டியில் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதிய போது அவுஸ்திரேலிய அணி வெற்றியை பதிவு செய்ய முடிந்தது. எனினும் வனிந்து ஹசரங்கவின் பந்துகளில் அவுஸ்ரேலியா சற்று பின்னடைவை சந்தித்தது.
அவர் தனது 4 ஓவர்களை 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரிகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.
எனவே வனிந்துவின் பந்து வீச்சு குறித்து இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக இருக்கும்.
சீரற்ற காலநிலை காரணமாக போட்டிக்கு முன்னர் நன்கு பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இன்றைய போட்டிக்கு தமது அணி நன்கு தயாராக உள்ளதாக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் ரொமேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை விளையாடிய டி-20 போட்டிகளில் இலங்கை அணி 5 வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த இடைவெளி இலங்கை அணிக்கு இன்றைய போட்டியில் ஆறுதல் அளிக்கும்.