தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் அசத்தல் வெற்றி

0 91

ஐ.சி.சி. ரி – 20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதன்படி இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அசத்தல் பந்து வீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

மஹீஸ் தீக்‌ஷன ஒரு ஓவர்களை வீசி 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய 45 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இதன்படி முதற்சுற்றுப் போட்டிகளில் இலங்கை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சுப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.