Developed by - Tamilosai
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸ் நிறைவில் 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதனடிப்படையில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்டமாக ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் இலங்கை அணி 400 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது.