தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை அணி இமாலய வெற்றி!

0 98

ரி- 20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியில் நமீபியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன மூன்று விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதற்கமைய, 97 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ 42 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.