தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை அணியின் இருவருக்கு கொரோனா

0 256

எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அணியின் உதவிப் பணியாளர் டில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

குழு உறுப்பினர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான ரி20 சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பெப்ரவரி 03 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.