Developed by - Tamilosai
புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
காசல் வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சஜித்; ‘சீன உரம் கொண்ட கப்பல் எவ்வாறு இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது எமக்கு ஆச்சரியமாகவுள்ளது.
அது எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தது? எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட எவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது.
இலங்கையை நாடக மேடையாக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.