Developed by - Tamilosai
அமெரிக்காவின் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து P627 என்று அழைக்கப்படும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் படி, குறித்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையிலேயே உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
115 மீட்டர் நீளம் கொண்ட P627 என்று அழைக்கப்படும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது அதிகபட்சமாக 29 நாடிகள் வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 187 பேர் உள்ளடங்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கப்பலானது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது