Developed by - Tamilosai
இலங்கையில் 60 வீதமானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.