Developed by - Tamilosai
இலங்கையில் திறந்தவெளிக் குப்பை நிரப்புமிடத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு மாண்டுபோகும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பள்ளக்காடு கிராமத்தில் உள்ள அந்தக் குப்பை நிரப்புமிடத்தில் சென்ற வார இறுதியில் 2 யானைகள் மாண்டு கிடந்தன.
அங்குள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்டு கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 20 யானைகள் உயிரிழந்தன.
அவை அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது.
யானைகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவுப் பொருள்கள் எதுவும் பரிசோதனையில் புலப்படவில்லை.
யானைகளின் வாழ்விடம் அழிக்கப்படுவதால், அவை உணவு தேடி மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே வருகின்றன.
பசியில் வாடும் யானைகள், வேறு வழியின்றி பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்கின்றன.
2017ஆம் ஆண்டு, குப்பைகளை மறுபயனீடு செய்யப்போவதாகவும் குப்பை நிரப்புமிடத்தைச் சுற்றி மின்சார வேலிகளை அமைக்கப்போவதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் 2 திட்டங்களுமே இதுவரை முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.