தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் தீவிரமாகப் பரவும் மற்றுமொரு ஆட்கொல்லி நோய்!

0 71

 எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை (முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

2021ஆம் ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து 902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2,979 பேர் ஒக்டோபர் மாதத்தில் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், இம்மாதத்தின் கடந்த 4 நாட்களில் 505 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, அடுத்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, தமது வீடுகளுக்கு வரும் டெங்கு ஒழிப்புக் குழுவினர் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள பொதுமக்கள் உதவ வேண்டும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.