Developed by - Tamilosai
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றவியல் பிரேரணை என்பன பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த இரு நாட்களாக மேற்கொண்டு வந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலையுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. “Go Home Gota” என்ற மக்கள் போராட்டத்தைப் போன்று, இன்று “Go Home Ranil” என்ற போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது