Developed by - Tamilosai
இலங்கையில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானம்
ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கையில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுற்றுலாப் பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு நேரில் வருகை தருமாறு அல்லது ஆன்லைனில் விசாவை நீட்டித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமைச்சரவை முடிவின்படி, 2022.02.28 க்குள் விசா காலாவதியாகும் சுற்றுலாப் பயணிகளுக்கு 2022.05.22 வரை ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.