Developed by - Tamilosai
2022 ஏப்ரல் மாதத்திற்குள் தினமும் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை தாண்டியதாக அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
மார்ச் 2020 க்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளைப் போன்று 2020 ஏப்ரல் மாதத்திற்குள் சுற்றுலா பயணிகளின் வருகையும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசிகளின் வெற்றியுடன், கொவிட்-19 தொற்றாளர்களின் குறைவு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதனால் அது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.