தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் சினிமா துறையை தொழிலாக அங்கீகரிக்க அமைச்சரவை அனுமதி!

0 125

இலங்கையில் இதுவரை உள்ளூர் சினிமாத் துறையை, ஒரு தொழிற்துறையாக சட்டரீதியாக வெளியிடப்படாமையால் அதன் அளவும் விருத்தியும் சிறியளவில் உள்ளூர் வணிக வாய்ப்புக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் சினிமாத்துறையை சார்ந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் சினிமாத்துறையை முன்னேற்றுதல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம் பல வாழ்வாதார வழிகள் உருவாதல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார நவீனமயப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் கல்வி போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்தல் போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் சினிமாத்துறையின் மேம்பாட்டுக்காகவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் சினிமாவை தொழிற்துறையாக பதிவு செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.