தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் சடுதியாகக் குறைந்த கொரோனா மரணங்கள்

0 352

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8 ஆண்களும், 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் 30 முதல் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 2 ஆண்களும், ஒரு பெண்ணுமாக 3 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 ஆண்களும், 3 பெண்களுமாக 9 பேரும் உயிரிழந்தனர்.


இந்நிலையில் இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 484 ஆக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.