Developed by - Tamilosai
இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது தாய் ஒருவரே, இவ்வாறு ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு 3 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.