தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் உயர்தர மருந்து உற்பத்தித் திட்டம்

0 122

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து தனியார்த் துறையை ஊக்குவிக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளின் விலையை சீராக வைத்திருக்க பொருத்தமான விலை நிர்ணய பொறிமுறையை முன்வைக்க ஏற்கனவே முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ள அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.