தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கையில் அதிகரித்து வரும் துவிச்சக்கர வண்டி பயன்பாடு

0 51

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசை, கட்டுப்பாடற்ற எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால்  பலர் தற்போது துவிச்சக்கர வண்டியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் துறையின் பேராசிரியர் மெத்திகா விதானகே தற்போது தனது பணியிடத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதனை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் மாற்றாகவும் தான் சைக்கிளை தெரிவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போது சைக்கிள்களின் விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

சந்தையில் சைக்கிள் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணத்தினால் பலர் பழைய சைக்கிள்களை வீட்டிலேயே சரி செய்து மீண்டும் பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.

துவிச்க்கர வண்டி ஓட்டுதலை மீண்டும் ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென துவிச்சக்கர வண்டி சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.