Developed by - Tamilosai
கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் போக்குவரத்துகளில் சிக்கல் ஏற்படலாம் என்றும் பல இடங்களில் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே ,இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பேரணி மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பிரதேசங்களுக்கான சுற்றுலாப் பயணங்களை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.