Developed by - Tamilosai
மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பிரியந்த குமார என்ற இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பல பாகிஸ்தானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு அவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இலங்கையிடம் மன்னிப்பு கேட்பதைக் காணமுடிகின்றது.
அதேநேரம், சில இலங்கையர்களிடம் சிங்கள மொழியில் மன்னிப்புக் கோருவதையும் காணமுடிந்தது.
மேலும், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு குழுவினர் இலங்கையிடம் மன்னிப்பு கோரும் வகையிலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.