தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைத் தமிழ் மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு

0 107

 கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்ட நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லைக்குள் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மீனவர்கள் இருவரும் நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த மீனவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.