Developed by - Tamilosai
இலங்கைத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஆதரவாக வீதியில் களமிறங்கிய தென்னிலங்கை மக்கள்
இலங்கைத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஆதரவாக வீதியில் களமிறங்கிய தென்னிலங்கை மக்கள் இன்று அரசுக்கெதிராக மீண்டும் வீதியில் களமிறங்கியுள்ளனர்.
இனவாதத்தை கைவிட்டு அரசியல் தீர்வொன்றை வைத்திருந்தால் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில் சமுக நீதி அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டி வந்திருக்கும்.
மாறாக இனவாதத்தை வைத்திருந்தால் மட்டும் தான் கொள்ளையடிக்கலாம். தனது குடும்பத்தில் அரசாங்கத்தை கைப்பற்றி கொள்ளையடிக்கலாம்.
ராஜபக்ச குடும்பம் என்பது சிங்கவர்களுடைய துட்டகைமுனு என்ற வகையில் ஆட்சி செய்து வந்தனர்.இதனை கோட்டாபயவே கூறியிருக்கிறார்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, இதன் பின் விளைவுகள் என்னவாறாக அமையப்போகின்றன என்ற பல்வேறு விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.