தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கிய சீனா

0 42

சீனா உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசி தொகையை கையளிக்கும் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர் Qi Zenhong ஆகியோர் கலந்துகொண்டனர்.

சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இந்த உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் பத்து லட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரிசி நிவாரணத்தை வழங்கவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78 வீதத்தை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.