Developed by - Tamilosai
அண்மையில் அரசாங்கத்துடன் நீண்டகால மசகு எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம், ஜனவரி 26 ஆம் திகதி இலங்கைக்கு மசகு எண்ணெய் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எரிசக்தி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 3 ஆம் திகதி மூடப்படுவதுடன், ஜனவரி 30 அல்லது அதற்கு முன்னர் மசகு எண்ணெய் விநியோகம் கிடைத்தவுடன் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதால் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.