Developed by - Tamilosai
நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam, 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று கையளித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு, அண்டிபயாடிக் வாய்வழி மற்றும் ஊசி மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு, வலிப்பு எதிர்ப்பு மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு மருந்துகள் உட்பட 79 அத்தியாவசிய மருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.