தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு தனது இராணுவத்தை இராணுவத்தை அனுப்பவில்லைஅனுப்பவில்லை

0 459

இலங்கையின் தற்போதையை நிலையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கைக்கு தனது இராணுவத்தை இந்தியா அனுப்பவில்லை என்றும் அவ்வாறு அனுப்பாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளியான  தகல்களை நிராகரிப்பதாக ட்வீட் செய்துள்ளது.

இவ்வாறான போலியான செய்திகள், இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

“இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாகத் தெரிவித்தார்” என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.