Developed by - Tamilosai
பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் செயலாளர் எசல ருவான் வீரகோன், பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவை சந்தித்தபோது,
அவர், நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கலாம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு மத்தியில் அதிக உணவுகளை பொருட்களை பயிரிட பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.