தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கு உரம் வழங்கும் இந்தியா – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

0 59

நேற்று(01) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை விரைவில் பெற்றுத்தருவதற்கு,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் கிடைக்கவுள்ள உரத் தொகையை 20 நாட்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.

உமா ஓயா மற்றும் மொரகஹகந்த செயற்றிட்டங்களை இவ்வருடம் நிறைவு செய்வதனூடாக பெரும்போகத்தில் சிறந்த பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.