Developed by - Tamilosai
இலங்கை இந்தியாவிடம் வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த, மேலும் கால அவகாசத்தை இந்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையை இந்தியா மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய – இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.