தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் நேரடி விமான சேவை மீள ஆரம்பம்

0 118

 இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை ஒரு மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்ஸின் பாரிஸிலுள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்கான விழா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும் என்றும் அதே நாளில் பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல்,  நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.