Developed by - Tamilosai
இந்த ஆண்டு இலங்கைக்கான விமான சேவைகளில் மேலும் ஐந்து விமானங்களை சேர்க்கவுள்ளதாக கொள்ளவுள்ளதாக எமிரேட்ஸ் ஏயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. புதிய விமானங்கள் 2022 பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் தனது செயல்படத் தொடங்கும் என்று விமான நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.கூடுதல் விமானங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொழும்பிற்கு 26 வாராந்திர விமான சேவைகளை வழங்குவதற்கு உதவும். மாலேயில் இருந்து கொழும்புக்கான தினசரி சேவையும் இதில் அடங்கும். புதிதாக சேர்க்கப்பட்ட விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்.