தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறுதி முயற்சியில் கனடா காவல்துறையினர்

0 263

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கிய பாலத்தினூடான போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனரக பாரவூர்தி சாரதிகளை அப்புறப்படுத்தும் இறுதி முயற்சியில் கனடா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

எல்லையை கடக்க கொவிட் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்ற கனடா அரசின் அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் பாரவூர்தி சாரதிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று நீதிபதி போராட்டத்தை கலைக்க உத்தரவு பிறப்பித்தார், ஆனால் டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். பல நாட்கள் எச்சரிக்கைக்குப் பிறகு, காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து வாகனங்களை இழுத்துச் செல்கின்றனர்.

சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட பல வாகனங்கள் காவல்துறையின் உத்தரவின் பேரில் அமைதியான முறையில் புறப்பட்டுச் சென்றன.

ஆனால் காவல்துறையின் நடவடிக்கை பற்றிய செய்தி பரவியதும், அதிகமான போராட்டக்காரர்கள் வந்து, கூட்டத்தை மேலும் அதிகப்படுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை காலை, ஒரு சில டசின் மக்கள் மட்டுமே இருந்தனர், மற்றும் காவல்துறையினர் தங்கள் நடவடிக்கையை மீண்டும் தொடங்கினர், இந்த முறை வெளியேற மறுத்த சிலரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.