Developed by - Tamilosai
நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ரி- 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று இப்போது இடம்பெறுகிறது.
டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் நாணயச் சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஐ.சி.சி. ரி-20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது அவுஸ்திரேலியாவா அல்லது நியூஸிலாந்தா எனப் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளும் முதன்முறையாக சம்பியன் ஆகும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.