Developed by - Tamilosai
இலங்கையின் துறைமுகங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படும் செய்திகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சதொச மற்றும் ஏனைய அதிகாரிகளின் தலையீட்டுடன் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.